பருவத்தேர்வுகள் நடத்த உத்தரவு!! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!!

 
பள்ளிக்கல்வித்துறை தேர்வு

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள்

இருந்த போதிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். பள்ளிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் இவைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில்  6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்பில் மகேஷ் மாணவர்கள்
அதன்படி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12ம் தேதி வரையும், 6 முதல் 10ம் வகுப்பு  மாணவர்களுக்கு ஆகஸ்ட் 5 முதல் 12ம் தேதி வரையிலும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா குறித்த அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web