பெற்றோர்களே உஷார்..!! பள்ளி செல்லும் சிறார்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

 
குழந்தைகளுக்கான தடுப்பூசி

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா குறிப்பிட்ட சில பகுதிகளில் மீண்டும் வேகமெடுத்து பரவத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகின்றன.

தடுப்பூசி

அதே நேரத்தில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் 2022-23ம் ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது என ஐந்து மடங்கு உத்திகளை பின்பற்ற வேண்டும் என்றும், சர்வதேச விமான பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பள்ளிக்குச் செல்லும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.     

குழந்தைகளுக்கான தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவடையவில்லை. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகளை கடைபிடிப்பதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மாநில அரசுகள் கொரோனா தடுப்பூகள் காலாவதி ஆவதை கண்காணித்து அவற்றை உடனடியாக பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும் என்றும் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web