பெற்றோர்களே உஷார்!! குழந்தைகளை குறிவைத்து தாக்கும் புதிய வகை நேரோ வைரஸ்!!!

 
நேரோ வைரஸ்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா புதிய வைரஸ்களின் கூடாரமாகி வருகிறது. அதிலும்  தற்போது பரவத் தொடங்கியிருக்கும்  புதிய வகை நோரோ வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நோரோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம், தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

நேரோ வைரஸ்

கேரளாவில் ஜூன் 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில்  திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞம் பகுதியில்  தொடக்க பள்ளிக்கு சென்ற சில மாணவர்களுக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை  மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்கப்பட்டனர் பரிசோதனை முடிவில் 2 மாணவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.  ஏற்கனவே கேரளாவில் பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் என பல விதமான வைரஸ்கள் பரவி வந்த நிலையில் இப்போது புதிய வகை நோரோ வைரஸ் பரவி இருப்பது சுகாதார துறையினரை அச்சத்தில்  ஆழ்த்தியுள்ளது.

நோரோ வைரஸ் பாதித்தவர்களுக்கு வாந்தி மயக்கம், தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அத்துடன்  வாந்தி மற்றும் வயிற்று போக்கு அதிகமானால் உடல் பலவீனம் அடைந்து நோய் பாதிப்பு அதிகரித்து மேலும் ஆபத்து அதிகரிக்கலாம். நோரோ வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களிடம் தொடர்பில் இருப்போருக்கும் இந்த நோய் பரவக்கூடும்.  நோயாளிகளின் வாந்தி மற்றும் உமிழ் நீர் மூலம் இந்த நோய் பரவும் அபாயம் அதிகம். இதனையடுத்து வழிகாட்டும் நெறிமுறைகளை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் நோரோ வைரஸ் பாதிப்பை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சுத்தமான தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொரோனா

கிணறுகள் மற்றும் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் மூலம் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவி  பயன்படுத்த வேண்டும். கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.  கேரளாவில் தற்போது பரவி வரும் புதிய வகை நோரோ வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரைத் தவிர மேலும் 5 மாணவர்களுக்கும் இதே அறிகுறிகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே இவர்களுக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கூறமுடியும் எனத் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web