இன்று நாடாளுமன்ற தேர்தல்!! இலங்கையின் புதிய அதிபர் யார்?!

 
இலங்கை

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமிசிங்கே பொறுப்பேற்றார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை

இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. 225 எம்பிக்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா, அதிபர் தேர்தலில் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி டலஸ் அலகபெருமவை ஆதரிப்பதாக தெரிவித்தார். 

இத்தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெருமாள் ஆகியோர் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளது. அலகபெருமவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கை

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி. கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்க முடிவு எடுத்துள்ளது. கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. 

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கோட்டப்பயாவின் பதவி காலம் முடியும் 2024 நவம்பர் வரை பதவியில் இருப்பார் என்றும் தெரிகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1993-ம் ஆண்டு அதிபர் ரணசிங்கே பிரேமதாசர் கொல்லப்பட்டதால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அதிபர் ஆனார் விஜய்துங்கா.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web