மக்களே உஷா......ர்!!! ஒரே நாளில் 8000க்கும் அதிகமான கொரோனா!! 4 வது அலையா?!

 
கொரோனா

 

இந்தியாவில் மார்ச் 2020 முதல் கொரோனா பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வந்த 3 அலைகளில் கொரோனா அதிக அளவு பாதிப்புக்களையும், உயிரிழப்புக்களையும் பெற்றுள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனா 4 வது அலை வரக்கூடும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ற வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

College students corona

 கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள், மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 7,240 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா தொற்று 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் மீண்டும் ஒரு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிடுமோ என்ற பீதி நிலவுகிறது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 05 ஆயிரத்து 106 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய கொரோனா பலி 8 ஆக இருந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 24 பேராக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 747 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,791 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,44,092 ஆக அதிகரித்துள்ளது.

corona spike

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 36 ஆயிரத்து 267 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,94,76,42,992 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று ஒரே நாளில் 15,31,510 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த கொரோனா அப்டேட் தகவல்கள் அனைத்தையும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தினசரி கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  இதனை கருத்தில் கொண்டு மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web