மக்களே உஷார்!! இன்னைக்குள்ள இதை செய்யல்லன்னா 2 மடங்கு அபராதம்!!

 
ஆதார் பான்

இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயம். இந்த ஆதார் எண்ணை பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. பான் எண்ணுடன்  ஆதார் எண்ணை இன்னும் இணைக்கவில்லை எனில் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசின் உத்தரவுப்படி இந்திய குடிமகன் ஒவ்வொருவரும்  தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண்ணை  கட்டாயமாக இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு இந்த வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி கடைசி நாள் என வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. பின்னர் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த எண்களை இணைக்காமல் இருந்தவர்கள் அனைவருக்கும் 2023 மார்ச் வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதே நேரத்தில் மார்ச் 30  தேதிக்கு பிறகு ஜூன் மாதம் 30ம் தேதி வரை பான் இணைப்புக்கு வருபவர்களுக்கு ரூ500 அபராதம்  வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. நாளை ஜூலை 1முதல் இந்த அபராதத் தொகை ரூ  1000 ஆக வசூலிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. 

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!
இந்த புதிய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால் அடுத்த வருடம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்பட்டு விடும்.  அதன் பின்னர் அந்த எண்ணை எதிலும் பயன்படுத்த இயலாமல் போவதற்கான வாய்ப்புள்ளது என வருமானவரித்துறை அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் நாளை முதல் அபராதம் இரு மடங்காக அதிகரிக்க உள்ளது. இதனால் உடனடியாக இன்றே ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்து விடுவது நல்லது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web