உஷார்!! ஒரே நாளில் 75000 த்தை தாண்டிய கொரோனா!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

 
கொரோனா

 

இந்தியாவில் கடந்த சில  வாரங்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியும், கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தவும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்று எண்ணிக்கையால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொரோனா

தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் தொற்று எண்ணிக்கையை குறைப்பது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.இந்நிலையில் நேற்று இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,899 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது 12,781 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை நீடித்து வருவது கவலை அளிக்கிறது. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,09,473ஆக பதிவாகி உள்ளது.

மேலும் நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை 15 ஆக பதிவாகி இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 18 பேராக உயர்ந்துள்ளது மருத்துவ நிபுணர்களுக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பெரிய தலைவலியாகி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,24,873 ஆக பதிவாகி உள்ளது. 8,537 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 4,27,07,900 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 76,700 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா

இந்தியாவில் இதுவரை 1,96,18,66,707 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 2,80,136 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web