மக்களே உஷார்!! அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!!

 
மழை

தமிழகத்தில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  இன்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி  உள்ளிட்ட 7 மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இதேபோல் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்  ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக  நீலகிரி மாவட்டம் தாலுக்கா அலுவலகம், பந்தலூர்  பார்வூட்,  ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும்,  நீலகிரி மாவட்டம் நடுவட்டம்,  தேவாலா, கோவை மாவட்டம் சின்னக்கல்லார்   ஆகிய பகுதிகளில்  தலா 5 செ.மீ மழியும் பதிவாகியுள்ளது. 

மழை
மேலும், இன்று ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று  வீசக்கூடும் என்றும், இன்று முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை  குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web