மக்களே உஷார்!! பார்ல செம குடி! ஒட்டுமொத்த சீனாவும் கதறுது!

 
கொரோனா


கடந்த 2019ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது வரை உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில்  கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தினசரி கொரோனா தொற்று தற்போது வேகமெடுத்து வருவதால் மருத்தவ மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவில்  தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா
உலகில் மக்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் மொத்தம் 140 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை அங்கு கொரோனா உயிரிழப்பு வெறும் 5,226 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சீனா இன்னும் ஜீரோ கோவிட் என்ற கொள்கை¬யை தீவிரமாக பின்பற்றி வருகிறது.

பெய்ஜிங் நகரத்தில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்ததற்கு ஹெவன் சூப்பர் மாரக்கெட்டில் அமைந்துள்ள பார் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மதுக்கடையில் மது அருந்திய மாத்தம் 61 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் இது பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். எனவே தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. மேலும் தொற்று பாதிப்புக்கு ஆளான 61 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா

சில வாரங்களுக்கு முன்புதான் சீனாவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வந்த நிலையில், குறிப்பிட்ட பாரில் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்து 6,158 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மீண்டும் சீனாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஷாங்காய் நகரிலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு, சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த நகரத்தில் உள்ள 2.5 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் அறிகுறிகள் இல்லாத தொற்றும் காணப்படுவதால் சீனாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web