மக்களே உஷார்!! ஒரே நாளில் 12000க்கும் அதிகமாக பதிவான கொரோனா!!

 
கொரோனா

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. அந்த வகையில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

கொரோனா

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 8,822 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 12,213 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து 730 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 803 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,624 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 58 ஆயிரத்து 215 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,95,67,37,014 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 15,21,942 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web