மக்களே உஷார்!! மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!! 4வது அலையா?!

 
கொரோனா

இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகிய நிலையில், தற்போது 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா 4-ம் அலை ஆரம்பித்துவிட்டதாக மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 3,712 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 4,041 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 651 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,363 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 21 ஆயிரத்து 177 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,93,83,72,365 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 12,05,840 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.தற்போது நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web