மக்களே உஷார்!! ஒரே நாளில் 16678பேருக்கு கொரோனா!! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!!

 
கொரோனா

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அதனை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா
கடந்த  24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,678  பேர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,39,329ஆக அதிகரித்துள்ளது. அதே போல் உயிரிழப்பு 26 பேர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,454 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில்  இருந்து ஒரே நாளில் 14,629 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,29,83,162 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைபவர்களின்  விகிதம் 98.50% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.20% ஆகவும் குறைந்துள்ளது.

கொரோனா
அதே நேரத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் விகிதமும் 0.30% ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது  இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  1,30,713 பேர் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  இதுவரை 1,98,88,77,537 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,44,145 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை