மக்களே உஷார் !! 1,00,000 ஐ கடந்த தினசரி பாதிப்பு!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

 
கொரோனா

கடந்த சில மாதங்களாக  இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இது சுகாதாரத்துறையினர் மத்தியிலும் மத்திய அரசையும் கதிகலங்க வைத்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 16,135 ஆக பதிவாகி உள்ளது. 

கொரோனா

மேலும் நேற்றைய கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆக பதிவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5,25,223 ஆக பதிவாகி உள்ளது. 16,135 பேர் கடந்த ஒரே நாளில் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,79,477 ஆக பதிவாகி உள்ளது. இந்தியா முழுவதிலும் தற்போது மருத்துவமனையில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆக பதிவாகி உள்ளது. நாட்டின் கொரோனா தினசரி பரவல் தொற்று சதவீதம் 4.85 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் 1,78,383 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 1,97,98,21,197 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் கூடும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web