5 மாவட்ட மக்களே உஷார்!! 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் சூறாவளி!!

 
சூறாவளி

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறு காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

மேலும், இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசாகவும் வெப்பம் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்..! புதிய காற்றழுத்த தாழ்வு..! 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிக கன முதல் அதி கன மழை எச்சரிக்கை

குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, கேரளா- கர்நாடக ஆகிய கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசும். இதற்கு இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் குஜராத், மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், வடகிழக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வருகிற 10ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web