பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ30 உயர்வு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

 
பெட்ரோல்

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒரே நாளில் ரூ.30 உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பெட்ரோல் உள்பட அனைத்து விதமான எரிபொருட்களின் விலையை பாகிஸ்தான் அரசு நேற்று திடீரென உயர்த்தியது. அனைத்து பொருட்கள் மீதும் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் நேற்று அறிவித்தார். இதன் காரணமாக பெட்ரோல் விலை ரூ.179.86-க்கும், டீசல் ரூ.174.15க்கும், மண்ணெண்ணெய் விலை ரூ.155.56க்கும் விற்கப்படுகிறது.

கத்தாரில் பாகிஸ்தான் அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இத்தகைய அறிவிப்பை அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பாகிஸ்தானில் பெட்ரோல், அதிவேக டீசல், மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் ஆகியவற்றின் விலைகளை இன்று முதல் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. புதிய விலைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை, மாறாக விலை நிலையாக இருந்திருந்தால் நாடு தவறான திசையில் சென்றிருக்கும்” என்று கூறினார்.

இந்தியாவின் முக்கிய 4 பெருநகரத்தின் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகை இதற்கு முன் உயர்த்தப்பட்டதே இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து 30 சதவீத விலை குறைப்பில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு செயல்படுத்த மறுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.இதனிடையே, கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.420-க்கு விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web