பெட்ரோல் பங்க் ஊழியர் பிரபல நடிகர் மீது சராமாரி தாக்குதல்!! பகீர் பிண்ணனி!!

 
பெஞ்சமின்

சேலம் அஸ்தம்பட்டி கம்பர் தெருவில் வசித்து வருபவர் நடிகர்  பெஞ்சமின். இவர் , 'திருப்பாச்சி' படத்தில் நடிகர் விஜய்க்கு நண்பராக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் இவர்  கோரிமேட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றார்.
பெஞ்சமின்
மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘திருப்பாச்சி’ படத்தில் கண்ணப்பன் என்ற ரோலில் நடிகர் விஜய்க்கு நண்பராக நடித்து பிரபலமானவர். ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அருள், வேங்கை, ஐயா, திருப்பதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சேலம் கன்னங்குறிச்சி கம்பர் தெருவில் வசித்து வரும் இவர், நேற்று மதியம், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு சென்றார். அங்கு பெட்ரோல் போட கூகுள்பே மூலம் ரூ.350 அனுப்பியுள்ளார். ஆனால், அவரது வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடவில்லை.

கைது

இதுகுறித்து பங்க் ஊழியரிடம் கேள்வி எழுப்பிய பெஞ்சமினிடம், தகராறில் ஈடுபட்ட ஊழியர் கிருஷ்ணமூர்த்தி பெஞ்சமினை கையால் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதுகுறித்து பெஞ்சமின் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web