இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!! குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை!!

 
gold jewel actress sneha gold jewel actress sneha

சர்வேதேச சந்தையில் நிலவி வரும் தங்கத்தின் விலையின் அடிபப்டையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக  இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான காரணிகளுக்கு ஏற்ப  தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் .

தங்கம்

அதன்படி  அமெரிக்காவின் பத்திர சந்தை  ஏற்றம் கண்டு வந்ததன் அடிப்படையில்   சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தது தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சில நாட்களிலேயே தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. 

gold actress

நேற்றைய விலை நிலவரப்படி  சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.38,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின்  விலை ரூ.50 அதிகரித்து , ரூ.4,810க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், தங்க முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35குறைந்துள்ளது. இதன்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4775க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்  சவரனுக்கு ரூ.280குறைந்து, ஒரு சவரன் ரூ.38200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1குறைந்து, கிராம் ரூ.67.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ67500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை