வெளியானது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்!! 90.07% தேர்ச்சி!!

 
தேர்வு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே மாதத்தில்  11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.  8 லட்சத்துக்கு மேற்பட்டோர் 11ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் நேரடியாக  தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையதளங்களில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.  காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 % சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதில்  மாணவிகள் 94.99 % மாணவர்கள் 84.6 % தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

தமிழகத்தில்  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2021-22 ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன. 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியிடப்பட்டன.தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். +2 தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் எனத் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

இந்த இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.அந்தந்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.   தனித்தேர்வர்களை பொறுத்தவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web