ஓடும் ரயிலில் ரகளையில் ஈடுபட்ட போலீசார்!! தட்டித் தூக்கிய ரயில்வே !!

 
ரகளை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.15 மணிக்கு சென்னை- தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே 5 பேர் திடீரென்று ரகளையில் ஈடுபடத் தொடங்கினர். இவர்களால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் யாரையும் உறங்கவிடாமல் கூச்சலிட்டு கேலியும் கிண்டலுமாக ரகளையில் ஈடுபட்டனர்.

ரயில்

இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அமைதியாக இருக்கக் கூறினர். ஆனாலும் அவர்களை மதிக்காமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டு சங்கடத்தை ஏற்படுத்தினர்.எனவே பொறுமை இழந்த பயணி ஒருவர் விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார்.  ஆனால், ரெயில் விழுப்புரத்தை அடைந்த போது அங்கு எந்த போலீசும் வராதது ஏமாற்றம் அளித்தது. இதனைத் தொடர்ந்து பயணிகள் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் ரெயில் இரவு 11 மணிக்கு விருத்தாசலம் சந்திப்பை வந்தடைந்த போது, அங்கு விருத்தாச்சலம் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் நின்று கொண்டிருந்தனர். ரயில் வந்து நின்றதும், பயணிகள் குறிப்பிட்ட எஸ் 3 பெட்டியில் ஏறி தங்கள் விசாரணையை நடத்தினர்.அப்போது பயணிகள் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களை பிடித்த போலீசார் ரயிலில் இருந்து கீழே இறக்கி விசாரித்தனர்.

கைது

போலீஸ் விசாரணையில் பிடிபட்ட  மாணிக்கராஜ், செந்தில்குமார், முருகன் ஆகியோர் சென்னை காவல் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் என்றும், உடனிருந்த மேலும் 2 பேர் அவர்களின் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 5 பேரும் மது அருந்தி இருந்ததும் தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து, போலீசார் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். இரவு நேரத்தில் ரயிலில் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவலர்களே மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் முகம் சுளிக்க வைத்ததோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web