அரசு பேருந்தில் போலீஸ் அதிகாரி அத்துமீறல்! வைரலாகும் வீடியோ!

 
போலீசார் அத்துமீறல்

வட்ட செயலாளர் வண்டு முருகனில் துவங்கி, சதுர செயலாளர் சந்து முருகன் வரையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவார்கள். இது நாடு முழுக்கவே சகஜமானது தான். ஆனால், பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்தவர்களே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவது சமீபமாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இத்தனைக்கும், காவல் துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

தொடரும் லாக்-அப் மரணங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து காவல் துறையினர் இப்படி சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர், அரசு பேருந்தில் தனது உறவினருக்கு அமர்வதற்கு சீட் வேண்டும் என்று தகராறு செய்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. 


புதுச்சேரியில் இருந்து நேற்று சென்னை புறப்பட தயாராக இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து ஒன்றில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அப்போது பேருந்துக்குள் திடீரென்று நுழைந்த  ஏஎஸ்ஐ ஒருவர், இருக்கைகளை பார்வையிட்டுக் கொண்டே வந்தார். அப்போது இருவர் அமரக்கூடிய இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்திருந்ததை பார்த்த அவர், அந்த பெண்ணை இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு கூறினார். அதற்கு அந்த பெண், ‘‘முன்பதிவு இல்லாத பேருந்தில் அமர்ந்துள்ள நான் ஏன் எழுந்திருக்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தான் ஏற்கனவே வந்து சீட் பிடித்து விட்டதாக ஏஎஸ்ஐ கூறினார்.

ஆனால் தான் வரும் போது யாரும் இருக்கையை பிடித்து வைத்திருக்கவில்லை என்று பதில் கூறியதால், ஏஎஸ்ஐக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடைசியில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஏஎஸ்ஐ, அந்த பெண்ணை இருக்கையில் இருந்து எழுந்திருக்கச் செய்துள்ளார். இதை அங்கிருந்த சக பயணி ஒருவர், தனது செல்போனில் படம் பிடிப்பதை பார்த்த ஏஎஸ்ஐ அந்த இளைஞருடன் தகராறில் ஈடுபட்டு அவரது செல்போனை பறிக்க முயன்றார்.

ஆனால் இளைஞர் செல்போனை தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஏஎஸ்ஐ, இடம் தர மறுத்த பெண், அவரது கணவர், செல்போன் தர மறுத்த இளைஞர் என 3 பேரையும் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். 
இதில் செல்போன் தர மறுத்த இளைஞரின் நண்பர்களுக்கு இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தான் அந்த இளைஞர் பத்திரிகை துறையில் பணியாற்றியவர் என்பது தெரிய வந்தது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இளைஞரை அவரது நண்பர்கள் வெளியில் அழைத்து வந்தனர்.

போலீசார் அத்துமீறல்

அதைத் தொடர்ந்து ஏஎஸ்ஐயின் அதிகார துஷ்பிரயோக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் தரப்பில் கூறும் போது, ‘‘அரசு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஏஎஸ்ஐ மற்றும் 3 பேருக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம்’’ என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏஎஸ்ஐ மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் சேவையில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் இது போன்று பொது மக்களிடம் அத்து மீறி நடந்து அவர்களை மிரட்டி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளலாமா என்று வீடியோவை பார்த்த நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web