நேதாஜியின் ராணுவத்தில் பணிபுரிந்த அஞ்சலை பொன்னுசாமி காலமானார்! பிரதமர் மோடி இரங்கல்!

 
அஞ்சலை பொன்னுசாமி

மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்றிருந்தவர் அஞ்சலை பொன்னுசாமி. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வாழும் சாட்சியமாக இருந்த அவரது மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு.

1920-ம் ஆண்டு மலைசியாவின் கோலாலம்பூரில் உள்ள செந்தூல் நகரில் அஞ்சலை பிறந்தார். இவருக்கு 21 வயது இருக்கும்போது, மலேசியாவில் ஜப்பானியப் படைகள் ஊடுருவியது. அப்போது நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது, இந்தியப் பெண்கள் ராணுவ உடையில் கம்பீரமாக இருப்பதை பார்த்த வியந்து போன அஞ்சலைக்கும் ராணுவத்தில் சேர ஆசை ஏற்பட்டது.

அஞ்சலை பொன்னுசாமி

இதையடுத்து, 1943-ம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்ஸி ராணி பிரிவில் அஞ்சலை சேர்ந்தார். அப்பெண்களை பார்த்து, உத்வேகமடைந்த அஞ்சலை, நாட்டின் சுதந்திரத்துக்காக, தன்னையும் அப்படையில் அர்ப்பணித்தார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டது. இதன்பின், அஞ்சலை மலேசியாவிற்கு திரும்பிச் சென்றார். பிறகு 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். 

இந்நிலையில், 102 வயதான அஞ்சலை பொன்னுசாமி, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் மலேசியாவில் காலமானார். இவரின் மறைவு செய்தியை அறிந்த இந்திய பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அஞ்சலை பொன்னுசாமி

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அஞ்சலை பொன்னுசாமி மறைவால் மிகவும் வேதனையடைந்தேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தைரியம் மற்றும் ஊக்கமளிக்கும் பங்கு எப்போதும் மக்கள் நினைவில் இருக்கும். 102 வயதான ஐஎன்ஏ வீரரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.]

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web