முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!! மாணவர்கள் உற்சாகம்!!

 
நீட்

இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் தேர்வுகள் எழுத வேண்டியது அவசியமாகிறது. தேசிய அளவில் நடத்தப்படும் இந்த  தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் கட் ஆப் அடிப்படையிலேயே கல்லூரிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நடப்பாண்டில் நீட் தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டன. தற்போது அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மாநில அளவில் நடத்தப்படும்!

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு மே 21, 2022 ல் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் nbe.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் NEET PG 2022-க்கான கட் ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.  தனிப்பட்ட மதிப்பெண் அட்டைகளை nbe.edu.in என்ற இணையதளம் மூலம்  ஜூன் 8, 2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.முதலில் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். 'NEET PG 2022 Result' என்ற இணைப்பைக் கிளிக் செய்யலாம்.  முடிவுகளின் PDF திறக்கப்படும். இதில் 'Ctrl+F'  மூலம் குறிப்பிட்ட ரோல் எண்ணைத் தேடலாம்.



மதிப்பெண் அட்டை, ஜூன் 8 ம் தேதி வெளியிடப்படும். ரிசல்ட் கட் ஆஃப் மட்டுமே வெளியாகியுள்ளது.இந்த மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, விரைவான தேர்வு முடிவுகளை அறிவித்ததற்காக தேசிய வாரியத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்  உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு மே 31 ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web