மீண்டும் பள்ளி மாணவி உடல் மறுபிரேத பரிசோதனை!!! கள்ளக்குறிச்சியில் பதற்றநிலை!!

 
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை


சின்னசேலம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் சடலத்தை ஏற்க மறுத்த பெற்றோர் மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மாணவியின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அந்த தருணத்தில் மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில், தங்களின் விருப்பப்படி மருத்துவக் குழுவினரை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டு மனுவை, நீதிபதிகள் நிராகரித்தனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை
இந்நிலையில் இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. திருச்சி மருத்துவர் ஜூலியானா ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவினர், தடவியல் நிபுணர் முன்னிலையில் இந்த மறுபிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில், தங்கள் விருப்பப்படி மருத்துவக் குழுவினரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சுற்றுவட்டார பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web