நாளை அமைச்சர் ஆலோசனைக்கூட்டம்!! மின்வெட்டு முடிவுக்கு வருமா?!!

 
விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி !

தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு, கோடை காலத்தில் அதிக மின்சாரத் தேவை காரணமாக கடந்த சில மாதங்களாகவே மின்வெட்டு பரவலாக உள்ளது. கிராமப்புறங்களில் அதிக அளவு மின்வெட்டு செயல்படுத்தப்படுவதாக மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். தற்போது நிலக்கரி இறக்குமதி செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மின் தட்டுப்பாடு குறைந்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இருப்பினும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் தேவையை சமாளிக்க வேண்டிய  சூழலில் தடுமாற்றம் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரி


மின் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதுடன் எதிர்கால தேவையை உணர்ந்து திட்டங்களை தீட்ட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மின்சாரத் துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தமிழகத்தின்  அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி !

இந்த கூட்டத்தில் கோடை காலத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம், தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் மின் மோட்டார்கள் பொருத்தும் பணி , மின்சார வாரியங்கள் ஏற்படும் விபத்துக்கள் , அடிக்கடி ஏற்படும் மின்தடை ஆகியவற்றை சீரமைப்பது குறித்தும்  தலைமை பொறியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web