உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் மருத்துவர்களுக்கு பிரதமர், மோடி வாழ்த்து!!

 
மோடி ஸ்டாலின்


தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 'தேசிய மருத்துவர்கள் தினம்' கொண்டாடுகிறது. வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.  

 ஸ்டாலின் மோடி

தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடினமாக உழைக்கக்கூடிய, உயிர்களை காக்கும் மேற்கொள்ளக்கூடிய, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மருத்துவர்கள்
இதேபோல்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், 'ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!' என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web