மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

 
மோடி

இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி காணொலி மூலமாக முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில், கொரோனா தொற்று பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, குரங்கு அம்மை நோய் போன்றவைகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய, பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதா கட்சி தலைமையில், மத்தியில் பிரதமர் மோடி பதவியேற்று நேற்று தனது 8வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பா.ஜனதா கட்சி சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர்.

மோடி

விழாவில் 8 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் கட்சியின் சாதனைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!!

பிரதமரின் இந்த அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 26ம் தேதி சென்னை வந்த பிரதமர்  நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web