ஜூன் 30 வரை இந்த மாவட்டத்தில் தடை உத்தரவு!!

 
144

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே பெரும் அரசியல் பதற்றம் நீடித்து வருகின்றது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவலர்கள் உச்சகட்ட உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள், நெருக்கடி காரணமாக ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது. 

உத்தவ் தாக்கரே
இந்நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  ஜூன் 30ம் தேதி வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ராஜஸ்தான் ஊரடங்கு 144

 இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். பதட்டமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவரவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web