போராட்டம் நடத்திய 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!! தட்டித் தூக்கிய காவல்துறை!!

 
செவிலியர்கள்

தமிழகத்தில் கொரொனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தற்காலிகமாக ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் தற்போது ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படாததால் செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. வேலைக்கு செல்பவர்கள் தங்கள் வாகனத்தை இயக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் கைது செய்தனர்.

செவிலியர்கள்
இதைத்தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘தகுதியுடைய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே செவிலியர்கள் யாரும் தங்கள் உடலை வறுத்திக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முன்பு திடீர் போராட்டத்தில் குதித்த 487 செவிலியர்கள் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. 

செவிலியர்கள்

செவிலியர்கள் மீது முன் அனுமதியின்றி போராட்டம் நடத்துதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட  2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ந்து போன செவிலியர்கள், தங்கள் மீதான கைது மற்றும் வழக்குப்பதிவு குறித்து தமிழக அரசு விலக்கு அளிக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web