மெரினாவில் போராட்டம்?! பரபரக்கும் சென்னை!! போலீசார் குவிப்பு!!!

 
மெரினா

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் கடந்த 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள், உடைமைகளுக்கு தீவைக்கப்பட்டது. 

மெரினா கடற்கரையில் படகு சவாரி! சுற்றுலாத்துறை அதிரடி!

இந்த வன்முறை தொடர்பாக 320-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக போராட்டக்காரர்கள் இணைந்த வாட்ஸ்அப் குரூப் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியது. ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் என்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு, அதில் ஏராளமான நபர்கள் இணைந்து இருந்த விவரங்கள் கள்ளக்குறிச்சி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மெரினா நீச்சல் குளம்

இந்த குழுவின் மூலமாகவே ஒரே நாளில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தியை பரப்பியதாக நான்கு மாணவர்களை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே மாணவியின் மரணம் தொடர்பாக போராட்டம் வதந்திகள் பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 உதவி ஆணையர்கள் தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web