நுபுர்சர்மா,நவீன் ஜிண்டாலை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!! வலுக்கும் சர்ச்சை!!

 
திருமா

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலைகைது செய்ய வேண்டும் என்றும், அக்னிபாத் திட்டத்தை முற்றாக கைவிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்  தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து, மற்றொரு பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைகுரிய வகையில் ட்வீட் செய்திருந்தார்.  பாஜக பிரமுகர்களின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இப்பிரச்சினை விஸ்வரூபம் அடைய, இருவரும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். 

நுபுர்சர்மா
இருப்பினும், ஆளும் கட்சி தலைவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள், இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனது. இந்நிலையில்  நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை கைது செய்யக்கோரியும், ஜேஎன்யூ மாணவி அஃப்ரீன் பாத்திமா வீட்டை புல்டோசர் கொண்டு தகர்த்த உ.பி அரசைக் கண்டித்தும், ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம் கூடாதென நடந்த வன்முறையைக் கண்டித்தும், அக்னிபாத் என்னும் 4 ஆண்டு ஒப்பந்த முப்படை ஆளெடுப்புத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன், துணை பொது செயலாளர்கள் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய நுபுர் சர்மா, நவீன் ஜிண்டாலைகைது செய்ய வேண்டும் என்றும், அக்னிபாத் திட்டத்தை முற்றாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web