முழு மதிப்பெண் போடுங்க!! விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு!!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் மே 5ம் தேதி +2  பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் 6.50000லட்சம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலை பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.  இதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  அதன்படி,மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 1.87 கோடி விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 8ம் தேதி வரை  நடைபெற உள்ளது. 

விடைத்தாள்கள் திருத்தும் பணி
விடைத்தாள் திருத்தும் பணிக்காக ஒரு அறையில் 1 முதன்மைத் தேர்வாளர்,1 கூர்ந்தாய்வு அலுவலர், 6 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்,ஆங்கிலம் பாட விடைத்தாள்கள் காலை 15,மதியம் 15 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும். இயற்பியல், வேதியியல் கணிதம் பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 7ல் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. 

விடைத்தாள்கள் திருத்தும் பணி


இந்நிலையில்,10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை காட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேட்கப்பட்ட வினாக்களுக்கு மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இதனால்,தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருக்கக் கூடும். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு,தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web