அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளி காற்று! இடி, மின்னலுடன் மழை!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிவடைந்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக  39-40 டிகிரி செல்சியசாகவும் , குறைந்தபட்ச வெப்பநிலையாக  28-29 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மழை
மேலும்,தென் கிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு,கேரளா மற்றும் குமரிக்கடல்,தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இந்த சூறாவளி  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

 

From around the web