ரஜினி அங்கிள்... கதறியழுத மீனா! ரஜினி, குஷ்பு நேரில் அஞ்சலி

 
ரஜினி மீனா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா, பின்னர் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்த மீனா, 2009-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இவர் 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதன் பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல், லைவ் டெலிகாஸ்ட் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

குஷ்பு மீனா ரஜினி

இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், நுரையீரல் பிரச்சனையுடன் கோவிட் பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மீனா கணவர்

நடிகை மீனாவின் கணவர் திடீரென உயிரிழந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் ரஜினி அங்கிள் என கதறி அழுதாராம் மீனா. இதைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கலங்கிப்போனாராம்.  

 முன்னதாக நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன்.நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web