பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50 குறைப்பு! டீசல் ரூ.40. 54குறைப்பு! பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

 
இன்று (அக்டோபர் 13) பெட்ரோல், டீசல் விலை

உலக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54ம் குறைத்து அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. ஆம், பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் இந்த அதிரடி விலை குறைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய நாடுகளில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடும் போராட்டங்களை நடந்து வரும் நிலையில், பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பெட்ரோல்

சர்வதேச அளவில் ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த போரை காரணம் காட்டி இந்தியா, பாகிஸதான், இலங்கை உள்பட பல தெற்காசிய நாடுகள் எரிபொருளின் விலையை உயர்த்தியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் மட்டும் 4 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது, இதனால் அதிருப்தியடைந்த மக்கள் போராடங்களை நடத்தினர். ஏற்கனவை பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எரிபொருள் விலை உயர்வும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பெட்ரோல் லிட்டருக்கு 18.50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 40.54 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே,சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டபோது கனத்த இதயத்துடன் இந்த விலையுயர்வு அமல்படுத்தப்பட்டதாகவும், விலை சரிந்தபோது உள்நாட்டிலும் விலை குறைக்கப்பட்டதாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல்

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில் எரிபொருள் மீதான வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் அரசுக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த விலை குறைப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web