நெகிழ்ச்சி!! முதலைக்கு நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி !!

 
முதலை

கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அனந்த பத்மநாபசாமி கோவில் இந்த கோவில்  காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே அனந்தபுரத்தில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில்  1945ம் ஆண்டு இந்தக் கோவில் வாசலுக்கு வந்த முதலை ஒன்றை பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்தார்.  அதன் பிறகு இந்த முதலை திடீரென கோவில் திருக்குளத்தில் தோன்றி வசித்து வருவதாக செவிவழிச் செய்தி உண்டு. கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த இந்த முதலை `பபியா' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முதலை இங்கு எப்படி வந்தது, அதற்கு பபியா எனப் பெயரிட்டது யார் என்பது குறித்த தகவல்கள் யாரிடமும் இல்லை. 

முதலை

ஒருமுறை, இந்த முதலை கோவில் கருவறைக்கு முன் வந்து சாமி தரிசனம் செய்ததை அர்ச்சகர் தனது செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த ஃபோட்டோ அதிகளவில் பகிரப்பட்டது. கோவிலின் திருக்குளத்தில் மீன்கள் அதிகமாக உள்ளபோதும் இந்த முதலை அவற்றை உண்பது இல்லையாம். கோயிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி சாதத்தைக் காலையிலும், மதியமும் அர்ச்சகர் குளத்தில் போடுவார். அந்தப் பிரசாதத்தையே இந்த முதலை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்தது பெரும் ஆச்சரியம். 

கடந்த 2019-ம் ஆண்டு இந்த முதலை உயிரோடு இல்லை என்றொரு தகவல் பரவியது. அப்போது `முதலை நல்லபடியாக உள்ளது' என கோவில் நிர்வாகிகள் அறிவித்த நிகழ்வும் நடைபெற்றது. அதன்பிறகும் இந்த முதலை கோவில் வளாகத்துக்கு வந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

முதலை

இந்நிலையில் நேற்று இரவு பபியா முதலை இறந்துவிட்டது. தெய்விக முதலையின் உடல் கோயில் வளாகத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. பபியா முதலை இறந்ததைத் தொடர்ந்து இன்று காலை கோவில் நடை திறக்கப்படவில்லை. முதலையின் இறுதிச்சடங்குகள் முடிந்தபிறகு கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் முதலையின் இறப்பு செய்தி அறிந்த பக்தர்கள் திரளாகக் கோயிலுக்குச் சென்று பபியா முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web