மண்சரிவில் பலியான சதீஷ் குடும்பத்துக்கு ரூ10லட்சம் நிதி உதவி!! முதல்வர் அதிரடி!!

 
சதீஷ்

மதுரை மாவட்டம் விளாங்குடி மாநகராட்சியில்  பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இங்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற தொழிலாளி 20 அடி ஆழத்தில் மண்சரிவில் சிக்கிக் கொண்டார்.   சதீஷ் மீது மணல் மூடப்பட்ட நிலையில் சதீஷை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்புக்குழு  துரிதமாக செயல்பட்டது.

ஸ்டாலின் பணம்

அதில்  அவரின் தலை தனியாக துண்டிக்கப்பட்டது.  உடனையாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  தீயணைப்பு  துறையினர் சதீஷின் உடலை,  நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

சதீஷ்

இது  குறித்து சென்னையைச் சேர்ந்த ஏசிசிபிஎல்  ஒப்பந்த நிறுவன உரிமையாளர்,மேலாளர்,  பணியிட பொறியாளர்,  ஓட்டுநர் அனைவரின் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டு அஜாக்கிரதையாக  நடந்து கொண்டதற்கு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலயில் மண்சரிவில் பலியான சதீஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  அறிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த சதீஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்வதாகவும் முதல்வர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web