கடத்த முயன்ற ரூ 1,17,00,000 ஹவாலா பணம் !! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!!

 
வெளிநாட்டு கரன்சி

தமிழகத்தின் தலைநகர் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் 24 மணி நேரமும் பரபரப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும். இதனாலேயே இங்கு கண்காணிப்பு பணிகளும் மிகத் தீவிரமாக இயங்கி வரும். தமிழகம் மட்டுமல்ல உலகின்பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களும், மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களும் தினசரி ஆயிரக்கணக்கில் இந்த விமானநிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இதனால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் சென்னையிலிருந்து  சார்ஜா செல்லும் ஏர் இந்தியா பயணிகளை விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த விமானப்பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது ஆண் பயணி ஒருவர் சார்ஜாவிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். இவர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர் உடமைகளை தீவிர சோதனை நடத்தினர்.

வெளிநாட்டு கரன்சி

அப்போது அவர் வைத்திருந்த டிராவல் பேக்கில் ரகசிய அறைகள் இருந்ததாகவும் இதனை அதிகாரிகள் பிரித்து பார்க்கும் போது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரண்சி மறைத்து வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்திய மதிப்பிற்கு ரூ. 97.46 லட்சம் இருந்ததாகவும் இதனை கடத்த செல்ல இவர்கள் முயற்ச்சி செய்திருக்கலாம் என்றும் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பயணியிடம் சுங்கத் துறையினர் நடத்திய விசாரணையில், அவரோடு சேர்ந்த மற்றொருவர் துபாய்க்கு இதைப்போல் வெளிநாட்டு பணத்தை கடத்தும்  தகவல் தெரிந்தது. இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து துபாய்க்கு  புறப்பட தயாராக இருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனையிட்டனர். 

விமான நிலையம்

அப்போது சென்னையை சேர்ந்த 24 வயது ஆண் பயணி ஒருவரின் பையை சோதனையிட்டபோது, ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த ரூ. 19.68 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்றும்  வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர். 

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் 2 விமான பயணிகளிடம் இருந்து துபாய் மற்றும் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.1.17 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த பணம் அனைத்தும் ஹவாலா பணம் என்று தெரியவந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரு கோடி 17 லட்சம் ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web