ரூ28 கோடி திமிங்கல வாந்தி!! மீனவர்கள் போலீசில் ஒப்படைப்பு!!
கடல் வாழ் உயிரினங்களில் மிகப்பெரிய உயிரினமான திமிங்கலத்தின் கோடிக் கணக்கு மதிப்பிலான வாந்தியை கேரள மீனவர்கள் போலீசார் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கேரளா மாநிலத்தில் மீனவர்கள் அதிகளவில் மீன்பிடி தொழிலை செய்து வருகிறார்கள். அடிக்கடி அரிய வகையிலான மீன்வகைகள் இவர்களின் வலையில் பிடிபடுவது வழக்கம். இந்நிலையில் கேரள மாநிலம் விலிங்ஹாம் என்ற இடத்தில் மீனவர்களுக்கு அரிய பொக்கிஷம் ஒன்று கிடைத்துள்ளது.

அது அம்பர்கிரிஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் வாந்தி. இதன்படி சர்வதேச சந்தையில் ரூ.28 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனை கண்டெடுத்த மீனவர்கள் கடலோர போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்தனர்.இதை கைப்பற்றிய கடலோர போலீசார் கூறும்போது, ‘‘மீனவர்கள் அம்பர்கிரிஸை எங்களிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட நாங்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம், அவர்கள் எங்களிடமிருந்து அதைப் பெற்று சென்றனர்’’ என்று கூறினர்.

திமிங்கிலங்கள் பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும்.இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியானது ஒரு கிலோவின் மதிப்பு ரூ.1 கோடி என்று சர்வதேச சந்தையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இததத் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
