ரூ3கோடி ரொக்கப்பணம், 1கிலோ தங்கம்!! மருந்து ஆய்வாளர் வீட்டில் சிக்கிய ஹவாலா பணம்!!

 
ரெய்டு

பீகார் மாநிலம் பாட்னாவில் வசித்து வருபவர் ஜிதேந்திர குமார்.  இவர் கடந்த 2011-ம் ஆண்டு மருந்து ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். தற்போது பாட்னாவில் அவர் ஒரு பார்மசி கல்லூரியை நடத்தி வருகிறார். ஜிதேந்திர குமார் மீது கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து லஞ்ச புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தன. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சந்தேக வளையத்திற்குள் வந்த ஜிதேந்திரகுமாரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.

ரெய்டு
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நேற்று திடீரென்று மருந்து ஆய்வாளர் ஜிதேந்திரகுமாரின் அலுவலகம், வீடு உள்ளிட்ட 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.3 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அதிர்ச்சி! ஓபிஎஸ் வீட்டிற்கு அருகிலும் ரெய்டு!

மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அதிகாரி ஒருவர் வீட்டில் கோடிக்கணக்கிலான பணம், நகை, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை  கைப்பற்றப்பட்டதால் பாட்னாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜிதேந்திரகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web