தேர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ 5லட்சம் நிதியுதவி !! முதல்வர் அதிரடி!!

 
தர்மபுரி தேர் விபத்து

தர்மபுரி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை 18 ஊர் மக்கள் இணைந்து நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. காளியம்மன் தேரில் பவனி வந்த போது தேரின் வடத்தை பக்தர்கள் இழுந்து தொடங்கி வைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேரின் அச்சாணி முறிந்ததால் தேர் நிலை தடுமாறி சாய்ந்தது. இதில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் 5 பேர் தேருக்கு அடியில் விபத்தில் சிக்கினர். இதில் படுகாயமடைந்த மனோகரன், சரவணன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி தேர் விபத்து
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு தேர் விபத்தில் சிக்கியவர்களை ஊர் மக்கள் துணையுடன் தேரை அங்கிருந்து அப்புறப்படுத்தி மீட்டனர். பின்னர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த பக்தர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சை பெற அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது.

தர்மபுரி தேர் விபத்து

இந்நிலையில் தேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி தஞ்சாவூர் களிமேடு பகுதியில் நடைபெற்ற தேர் திருவிழாவில் நள்ளிரவு நேரத்தில் 11 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web