ரூ.50 லட்சம் மோசடி புகார்! பாஜக ஆதரவாளர் கைது!

 
பாஜக கார்த்தி கோபிநாத்

ரூபாய் 50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக ஆதரவாலரும், யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. 2000 வருடங்களுக்கு மேல் பழைமையான இந்த கோவில் சோழர்கள் ஆட்சியின் போது நன்கு கட்டப்பட்டு, அவர்கள் விரும்பி வணங்கிய கோவிலாக இந்த மதுரகாளியம்மன் கோவில் இருந்திருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் இக்கோவில் சிலைகள்  உடைக்கப்பட்டதாக புகார் கூறப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கோவில் சிலைகளை மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான் சேதப்படுத்தியதாக பாஜக மற்றும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி இருந்தனர். 

இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிலைகளை உடைத்தது சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடரந்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

பாஜக கார்த்தி கோபிநாத்

இந்த நிலையில், யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்தி கோபிநாத் சிறுவாச்சூர் கோவிலை சீரமைக்க போவதாக கூறி, வசூலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதை காரணமாக வைத்து இணையதளம் வழியாக ரூ.50 லட்சம் வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை சீரமைக்க ஒருவர் எப்படி தனிப்பட்ட முறையில் நிதி வசூல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. எனவே பணம் வசூலித்து கார்த்திக் கோபிநாத்  மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோவிலை சீரமைப்பதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.50 லட்சம் நிதி வசூலித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

க்ரைம்

இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், திமுகவினர் கார்த்திக் கோபிநாத் மீது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்குரியது. தேசியவாதியான கார்த்திக் கோபிநாத்துக்கு தமிழக பா.ஜ.க துணை நிற்கும். அவரின் அப்பாவிடம் அவருக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web