ரூ.7 லட்சம் தீயில் கருகி நாசம்! 8.3 கிலோ தங்கம் கொள்ளை! வங்கி லாக்கரை உடைத்து கொள்ளையர்கள் அட்டூழியம்!

 
வங்கி திருட்டு கொள்ளை

வங்கியில் லாக்கரை உடைக்க வெல்டிங் பற்ற வைத்த போது, லாக்கரில் இருந்து ரூபாய் 7 லட்சம் பணம் தீயில் கருகி நாசமாகியுள்ளது. 8.3 கிலோ தங்க நகைகளை லாக்கரில் இருந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தெலுங்கானா கிராமிய வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வங்கி பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்த போது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த வங்கி லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், லாக்கரை உடைக்க கேஸ் கட்டர் பயன்படுத்திய போது, அதில் இருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.

வங்கி திருட்டு கொள்ளை

மேலும், வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பாதுகாப்பு அலாரத்தின் இணைப்பை துண்டித்து, பின் லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. 

கொள்ளையடிக்கப்பட்ட லாக்கரின் அருகில் பெரிய லாக்கர் ஒன்றும் இருந்தது. அதனை கொள்ளையர்கள் திறக்காமல் சென்றதற்கு காரணம், தெரியாத நிலையில், உடைக்கப்படாத பெரிய லாக்கரில், ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது. 

க்ரைம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நிஜாமாபாத் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து, வங்கியில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தீவரமாக தேடி வருகின்றனர். வங்கி லாக்கரை உடைத்து, கொள்ளையர்கள் நகைகளையும், பணத்தையும் அள்ளிச்சென்றது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web