ஜூலை 24 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!! மாணவர்கள் உற்சாகம்!!

 
பள்ளி கல்லூரி விடுமுறை school holiday

இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பரவல்  தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மாநிலம்  முழுவதும்  ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்


கொரோனா பாதிப்புகளின் திடீர் அதிகரிப்பு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும்  ஜூலை 24ம் தேதி வரை திறக்கப்படாது என மணிப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது, அம்மாநிலத்தில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  மாநில பள்ளிக்கல்வி ஆணையர் எச் ஞான் பிரகாஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மாநிலத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 15 %க்கும் அதிகமாக உள்ளது.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் பொது நலன் கருதி ஜூலை 24 வரை மூடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே  கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூலை 16ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால், மணிப்பூர் மாநிலத்தின் அனைத்து பள்ளிகளையும்  ஜூலை  24 ம் தேதி வரை மூடப்பட அம்மாநில  அரசு உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web