எஸ்பி, கலெக்டர் அதிரடி மாற்றம்!! பரபரக்கும் கள்ளக்குறிச்சி!!

 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கன்னியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் கடந்த 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள், உடைமைகளுக்கு தீவைக்கப்பட்டது. 

கள்ளக்குறிச்சி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் டிஐஜி, 2 எஸ்.பி.க்கள் உள்பட 67 போலீஸார் காயமடைந்தனர். இந்த வன்முறையில் 27 பேருந்துகள் உள்பட மொத்தம் 67 வாகனங்களை கொளுத்தப்பட்டன. கள்ளக்குறிச்சி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 320-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web