SUPER!! மாற்றுத்திறனாளிக்களுக்கான ஆலோசனை வாரியம்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

 
மாற்றுத் திறனாளிகள்

முதல்வர் ஸ்டாலின் துறைவாரியாக மாவட்ட் செயலர்களுடன் 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இது வரை வெளியான அறிவிப்புக்கள், திட்டங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் , குறைகள் , குறைதீர் கூட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடுக்கி விடவும், பல அதிரடி அறிவிப்புக்களையும் வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாணை

அரசாணை

 இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றையும்  வெளியிட்டுள்ளது.இந்த அரசாணையில் “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016ன் படி,மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆணை வெளியிடப்படுகிறது.

மாற்று திறனாளிகள்

அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் ஏற்படுத்தப்படும். முதல்வர்  தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை,மாற்றுதிறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் உட்பட பலர்  சார் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web