SUPER!! ”அனைத்தும் சாத்தியமே!” மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் முதல்வர் திறந்து வைப்பு!!

 
முதல்வர்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஸ்டாலின் அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது . பல்வேறு சாதனை விளக்கக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு  வருகின்றன. அதே நேரத்தில் மாவட்ட அடிப்படையில் துறை வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் செயலாக்கத் திட்டங்கள் , நிலுவையில் உள்ளவை, தாமதத்திற்கான காரணங்களை முதல்வர் கேட்டறிந்தார். இதனை மேம்படுத்த பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். 

மாற்று திறனாளிகள்
அந்த வகையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான 'அனைத்தும் சாத்தியம்'  என்ற அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். சென்னை, காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள்

அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்காக நேரடி மானியம் தரும் திட்டத்தையும் தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளும் வழங்கியுள்ளார். முதல்வர் 2 நாட்கள் பயணமாக நாளை மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள சமத்துவ புரத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் ஆய்வு செய்யவும் இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web