23 ஆண்டுகளாக சாண்ட்விச்சுகள் மட்டுமே உணவு!! அதிசய பெண்மணி!!

 
சாண்ட்லர்

இங்கிலாந்தில் வசித்து வருபவர் 25 வயது ஜோ சாண்ட்லர். இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். இதனால், பள்ளி கூடத்திற்கு செல்லும் காலத்திலிருந்தே  லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளை மட்டுமே எடுத்துச் செல்வார். அத்துடன் கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச்சுகளை  மட்டுமே உணவாக சாப்பிட்டு வருவதாக  கூறுகிறார். 2 வயதில் தொடங்கிய  பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. தொடக்கத்தில் இவரது பெற்றோர்கள்  மற்ற உணவுகளை  கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால்,சாப்பிடாமல் பட்டினி கிடப்பாரே தவிர மற்ற உணவுகளை சாப்பிட மாட்டார். மேலும் மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. 

சாண்ட்லர்
அதே போல் உருளை கிழங்கு வறுவலில் தினமும் 2 பேக் எடுத்து கொள்வார். வெண்ணெய் தடவிய வெள்ளை பிரட்டையும் சாப்பிடுவார். இது குறித்து  சாண்ட்லர்  எனக்காக எனது தாயார் வாங்க கூடிய ஒரு பொருள் உருளை கிழங்கு வறுவல் மட்டுமே. அதனையும், மிருது தன்மை வரும் வரை வாயில் போட்டு உறிஞ்சுவேனே தவிர முழுமையாக சாப்பிட மாட்டேன். பள்ளியில் படிக்கும்போது எனது உணவாக வெண்ணெய் தடவிய பிரட்டின் நடுவே வைக்கப்பட்ட உருளை கிழங்கு வறுவல்களையே  எடுத்து செல்வேன். சில சமயங்களில் காலை உணவாக உலர்ந்த தானியங்களை சாப்பிடுவேன். மதிய உணவு, இரவு உணவாகவும்  சாண்ட்விச்சுகளையே எடுத்து கொள்வேன்.

சாண்ட்லர்

ஒரு சில சமயங்களில் பாலாடைக்கட்டி மற்றும் வெங்காய வறுவல்களையும் சாப்பிடுவேன் . இதனால், ஒரு கட்டத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் அளவுக்கு நோய் ஏற்பட்டுள்ளது.  இது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் பாதிப்புகளை கொண்டது. இதனால் பயந்து போன சாண்ட்லர்  தற்போது  முதன்முறையாக பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் பிற உணவுகளையும் சாண்ட்லர் சாப்பிட தொடங்கியுள்ளார்.

சாண்ட்லர்

ஸ்ட்டிராபெர்ரி பழங்களின் சுவைகளையே இப்போது தான் சாப்பிட்டு பார்க்கிறேன்.  சாண்ட்லர், புளூபெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களையும், முட்டைகோசுகள், கடலைகள் மற்றும் பிற உணவுகளையும் எடுத்து கொள்கிறார். 2023 மார்ச்சில் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.  தனது திருமணத்தில் ஒரு முழு உணவையும் எடுத்து கொள்வதாக அவர் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web