அலறி துடித்த குழந்தைகள்!! காப்பகத்தில் பேய் வேடத்தில் சுற்றித் திரிந்த ஊழியர்கள்!!

 
பேய்

நவநாகரீக வாழ்க்கை முறையில் பெற்றோர்கள் பிறந்தது முதலே காப்பகத்தில் விட்டு தான் வளர்த்து வருகின்றனர். பல நேரங்களில் சவாலாக இருந்த போதிலும் குழந்தைகள் அந்த மாதிரியான சூழலில் தான் வளர்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இது தான் நடைமுறையே. அதே போல் கொண்டாட்ட காலங்களில் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. 

குழந்தைகள்

அமெரிக்காவை பொறுத்தவரை ஹாலோவின் தினக் கொண்டாட்டத்தில் மனிதர்கள் பேய்வேடமிட்டு உலாவருவர். எனப்படும்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த கொண்டாட்டங்கள் மிகவும்  பிரபலம். ஒவ்வொரு ஆண்டும்  அக்டோபர் மாத இறுதி நாளில் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கும்.  இதில் ஆண்கள், பெண்கள்  பாகுபாடின்றி அனைவரம் பேய் வேடமிட்டு மகிழ்வார்கள்.

இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தின் ஊழியர்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பதற்காக விட்டு செல்வது வழக்கம். இதற்கிடையில் குழந்தைகள் காப்பக ஊழியர்கள் பேய் வேடமிட்டு குழந்தைகளின் முன்னே சென்று அவர்களை பயமுறுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

பணி இடை நீக்கம்

இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து பச்சிளம் குழந்தைகள் சாப்பிட உட்கார்ந்த நேரத்தில் ஊழியர்கள் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டது குறித்து கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் விளையாட்டுக்காகவோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்டார்களா என்பது குறித்து தெரியவில்லை.

காலை நேரத்தில் குழந்தைகள் சிற்றுண்டி சாப்பிட மேஜையில் அமர்ந்திருந்த நேரத்தில் ஊழியர்கள் அனைத்து குழந்தைகளையும் ஒன்றுவிடாமல் பயமுறுத்தினார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை நடுங்க வைத்தது.கடும் கண்டனத்தை தொடர்ந்து காப்பக ஊழியர்கள் 4 பேரை நிர்வாகம்  பணியில் இருந்து நீக்கியதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web