மாணவி தற்கொலை வழக்கில் பரபரப்பு! தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

 
சரளா

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து பெற்றோரிடம் விசாரித்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், மாணவியின் மரணம் குறித்த சந்தேகத்தை கேள்வி எழுப்பியுள்ள நிலையில், கீழச்சேரி மாணவியின் மரணம் குறித்தும் விசாரணையில் இறங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு சரளா (17) என்ற மகள் உள்ளார். இவர் திருவள்ளூவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீமதி

பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், டிஐஜி சத்தியப்பிரியா, எஸ்.பி பெகெர்லா செபாஸ் கல்யாண் ஆகியோர் பள்ளி நிர்வாகி ஆசிரியர்கள் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவியின் தற்கொலை தொடர்பாக இன்று (ஜூலை 28) தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.பி., பெகெர்லா செபாஸ் கல்யாண், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சார்பு ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரளா

இந்த விசாரணை முதலில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், விடுதி வார்டன் மற்றும் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்தில் சென்று ‌மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web