மிஸ் இந்தியாவாக ஷைனி ஷெட்டி தேர்வு!! குவியும் பாராட்டுக்கள்!!

 
ஷைனி ஷெட்டி

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற ‘விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ அழகிப் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து பல அழகிகள் பங்கேற்றனர்.

இந்த அழகிப் போட்டியில் இறுதியாக கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்த சைனி ஷெட்டி (21), ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2022  ஆக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தை ராஜஸ்தானின் ரூபல் ஷெகாவத்தும், மூன்றாவது இடத்தை உத்தர பிரதேசத்தின் ஷினதா செளஹானும் பிடித்தனா்.

ஷைனி ஷெட்டி

இந்த இறுதிப்போட்டியில் நடிகர்கள் நேஹா துபியா, டினோ மோரியா மற்றும் மலைக்கா அரீரா ஆகியோரும், நடன இயக்குநர் ரோஹித் காந்தி, ராகுல் கண்ணா மற்றும் ஷியாமக் தாவர் ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜும் நடுவராக இருந்தார்.

வெற்றியாளரின் தேர்வுக்குப்பின் முன்னாள் ஃபெமினா மிஸ் இந்தியா அழகி துபியா கூறுகையில், “நான் இந்தப் போட்டியில் பெற்ற அனுபவங்களை மீண்டும் என் நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த உலகத்தை சக்தி மற்றும் நேர்த்தியுடன் எடுத்துச்செல்லும் ஆர்வமும் திறனும் நிறைந்த இந்த இளம் கவர்ச்சியான பெண்களுடனான எனது பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மீண்டும் நினைவுபடுத்துகிறது” எனக் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web